என்ன கொடுமை சார் இது
இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 53 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக எம்டிவி நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
எம்டிவி சேனல் தலைவர் ஆதித்யா சாமி கூறுகையில்,இன்று அனைவரும் ஜெயிக்க விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறாவிட்டால் பலனில்லை. 90 சதவீதம் பேர் தங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்கள் புது வழிகளைத் தேடுகின்றனர்.
பணம் ஏன் அவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்வி. 85 சதவீதம் பேர் பணம் அதிகாரத்தை தருவதாக நினைக்கின்றனர். 64 சதவீதத்தினர் கவர்ச்சியளிப்பதாகவும், 90 சதவீத இளைஞர்கள் பணம் தான் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் கருதுகின்றனர்.
அப்படி என்ன லஞ்சம் கொடுத்து பணம் சம்பாதிப்பது என்று கேட்டதற்கு வெற்றிக்கு குறுக்கு வழியைத் தேடுவதாக 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.